BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

சற்றுமுன்

முக்கிய செய்திகள்

சினிமா

சினிமா

Wednesday, 19 June 2013

மாமனார், மாமியார் ஓ.கே., சொன்ன சந்தோஷத்தில் இருக்கும் சமந்தா!

இளம் ரசிகைகளால் விரும்பப்படும் நடிகர்களில், சித்தார்த்துக்கு முக்கிய இடம் உண்டு. ரசிகைகள் மட்டுமல்லாமல், பல நடிகைகளுக்கும், இவர், பிடித்தமானவர். 

பாலிவுட் நடிகை,சோஹா அலிகான், ஸ்ருதி ஹாசன்போன்ற நடிகைகளுடன், சித்தார்த்தை இணைத்து, கிசு கிசுக்கள் வந்தன. தற்போது, சமந்தாவிடம், சித்தார்த், லாக் ஆகி விட்டதாகவும், தினம்தோறும் ஒரு செய்திகள், ரெக்கை கட்டி பறக்கின்றன.

இந்நிலையில், தன் பெற்றோரிடம், சமந்தாவை, சித்தார்த் அறிமுகப்படுத்தி வைத்துள்ளதாகவும், அவர்களுக்சமந்தாவை ரொம்பவும் பிடித்துபோய் விட்டதாகவும், செய்திகள் வெளியாகிஉள்ளன. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், சமந்தா. 

எந்தநேரத்திலும், திருமணச் செய்தி பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால்,கோலிவுட்டும்,டோலிவுட்டும், பரபரத்து கிடக்கிறது.

ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

பாலிவுட்டில், “லக் என்ற படத்தின் மூலம், முதல் முறையாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார், ஸ்ருதி ஹாசன். ஆனால், “லக் திரைப்படம், ஸ்ருதிக்கு, “லக்தேடித் தரவில்லை.

இந்தநேரத்தில், பவன் கல்யாணுடன் நடித்த, “கப்பர் சிங் என்ற தெலுங்கு படம், ஆந்திராவின் மூலை முடுக்குகளிலெல்லாம், வசூலை வாரி குவித்ததால், தெலுங்கில், முன்னணி நடிகையாகி விட்டார், ஸ்ருதி.

தற்போது, “பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா ஆகிய தெலுங்கு படங்களிலும், “டி-டே என்ற, பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், “கப்பர் சிங் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இதிலும், பவன் கல்யாண் தான், ஹீரோ. காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க வைக்க,பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், அவர்கேட்ட சம்பள தொகையால், தலை தெறிக்க ஓடி வந்து விட்டாராம், படத் தயாரிப்பாளர். இதனால், மீண்டும் ஸ்ருதி ஹாசனை ஓப்பந்தம் செய்துள்ளனர்.

எருமை வயிற்றில் இருந்த செல்போனில் 7 மிஸ்டு கால்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை போட்ட சாணத்துடன் செல்போன் ஒன்று வெளியில் வந்து விழுந்துள்ளது.

பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஈஸ்வர தொட்டகாரா என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாட்டு தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் வீட்டில் செல்போனை தேடியுள்ளார். அது கிடைக்கவில்லை. உடனடியாக வேறு செல்போன் மூலம் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ரிங்டோன் மட்டும் சத்தம் குறைவாக கேட்டுள்ளது.

நாள் முழுவதும் தேடியும் செல்போன் கிடைக்காததால் வேறு செல்போன் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையில் வழக்கம் போல் மாட்டு தொழுவத்திற்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த எருமை ஒன்று சாணம் போட்டது.

அதை சேகரிப்பதற்காக கையில் அள்ளிய போது, அதனுடன் செல்போன் வந்துள்ளது. அதை கழுவி பார்த்த போது 7 மிஸ்டு கால்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதை பார்த்து ஈஸ்வர தொட்டகார ஆச்சரியத்தில் மூழ்கினார். பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருந்த செல்போனை தீவணத்துடன் சேர்த்து எருமை தின்றுள்ளது தெரியவந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நாள் முழுவதும் எருமையின் வயிற்றில் இருந்தும், தண்ணீர் உள்ளே செல்லாமல், செல்போன் நன்றாக இயங்கியது தான்.

நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! - வீடியோ இணைப்பு

கடல் கன்னிகள்…… கற்பனை என்று சொல்பவர்களும் உள்ளனர், நிஜம் என்று வாதடுகின்றவர்களும் உள்ளனர்.

கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனார்.

இவர் இக்காட்சியை வீடியோ பிடித்து இருக்கின்றார். பார்ப்பவர்களும் பிரமிக்கவே செய்கின்றனர்.


Tuesday, 18 June 2013

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

பி.வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார்.
படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம். இது குறித்து பி. வாசு கூறுகையில்,

கரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார்.

ஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில், ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது.

சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார்.

படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம். படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது.

ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

இறந்தவர் உயிர் பிழைத்தார்! : எல்லாம் சிவன் செயல் குடும்பத்தார் பூரிப்பு

தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே இறந்து போனவர் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமணா ஜயர். அவரது மகன் ரவி சாஸ்திரி(45). அவர் தேவிப்பட்டினத்தில் உள்ள திலகேஸ்வர சுவாமி கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

இதய கோளாறு காரணமாக கடந்த 13ம் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 16ம் திகதி அதாவது நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்தநிலையில் நேற்று இரவு ரவியின் கால் விரல் அசைந்தது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் உயிருடன் இருப்பதும், இதயம் பலவீனமாக உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் இயத நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இன்று காலை எழுந்து உட்கார்ந்து உறவினர்களுடன் பேசியுள்ளார். இறந்தவர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது குறித்து அவரது மனைவி புவனா கூறுகையில், சிவ பெருமானை தொடர்ந்து பூஜித்து வந்தோம். அவர் அருளால் தான் என் கணவர் உயிருடன் மீண்டு வந்துள்ளார் என்றார்.

வாய்ப்புக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சினேகா அதிரடி

எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா.தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சினேகா, திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

திருமணத்துக்கு பிறகு தான் அதன் ஷூட்டிங் முடிந்து வெளியானது.

சினிமா வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே நான் ஒரு எல்லை வகுத்திருக்கிறேன்.
எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வந்தால் தான் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Copyright © 2013 Tamil Space Updates
Designed by Bharath Technologies