சூர்யா ஹீரோவாக நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு ஒருவழியாக ஹீரோயினாக அமலாபாலை கமிட் செய்திருக்கிறாராம் கெளதமேனன்.‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தையடுத்து, கெளதம்மேனன் திடீரென்று ஆரம்பித்த படம் தான் துருவ நட்சத்திரம்.
இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
ஆனால், படத்தின் ஹீரோயின் யார் என்பதில் மட்டும் முடிவெடுக்காமல் குழப்பத்துடனே இருந்தார் மேனன். ஏற்கனவே அவருடைய விண்ணைதாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவையே, இந்தப்படத்திலும் குறைந்த சம்பளத்தில் ஹீரோயினாக்கி விடலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் த்ரிஷாவுக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர் அமலாபாலை கமிட் செய்திருக்கிறார். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளிலும் பிஸியாக இருக்கும் அவரை ஹீரோயினாகப் போட்டால் தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளிலும் படத்தை விற்று விடலாம் என்பது தான் மேனனின் திட்டமாம்.
உடனே அமலாபாலை கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷத்துடன் நடிக்க ஓ.கே சொல்லி விட்டாராம்.
இதனால், விஜய்யுடன் தலைவா படத்தையடுத்து, மீண்டும் ஒரு பெரிய பேனரில், பெரிய ஹீரோவுடன் நடிக்கும் சான்ஸ் கிடைத்துள்ளதால், ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால்.
Post a Comment