BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 17 June 2013

இனி நம் ஜீன்ஸிலிருந்து சார்ஜ் ஏத்தலாம்!!

இப்போதைய காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செல் போன் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பலரின் போனில் விரைவில் ‘சார்ஜ்' போய் விடுகிறது. 

அதற்காக பல வித டெக்னாலஜியில் பல்வேறு டைப்பிலான சார்ஜர் கண்டுபிடிக்கப் பட்டு வந்த நிலையில் அண்மையில் நாம் அணியும் கால் சட்டையின் மூலம் இது போன்ற செல்போன்களை ‘சார்ஜ்' செய்வதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 

பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வோடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய இந்த விசேஷ டெனிம் கால் சட்டையை அணிந்து கொண்டு நடக்கும் போது அதிலிருந்து ஏற்படும் சக்தியினால் செல் போன்கள் ஆட்டோமெட்டிக்காக சார்ஜ் செய்யப்படுமாம்.

இதற்கு ‘பவர் ஷோர்ட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.இந்த வசதிக்காகவே உருவாகப் பட்டுள்ள கால்சட்டையை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் தேவையான மின் சக்தி உற்பத்தி செய்யப்படுமாம்.

அத்துடன் கால்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்' எனும் இணைப்பான் மூலம் செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு இந்த மின் சக்தியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது ‘பீஸோ எலெக்ரிசிட்டி' என அழைக்கப்படுகிறது. இதற்கு அழுத்தத்தின் மூலம் ஏற்படும் மின்சக்தி என்று அர்த்தமாகும்.

அதேவேளை குளிரான காலநிலையில் உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்லீப்பிங் பேக் எனும் தலையணை மூலம் இதே போல் செல்லிடத் தொலைபேசிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது.

இதில் மனித உடல் வெப்பத்தை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. இது பைரோ எலெக்ரிசிட்டி என அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Post a Comment

 
Copyright © 2013 Tamil Space Updates
Designed by Bharath Technologies