சினிமாவுக்குள் நுழையும் போதே யதார்த்தத்தை வீட்டில் வைத்துவிட்டு வரும் நடிகைகளுக்கு மத்தியில் லட்சுமிமேனன் கிரேட். எல்லா விஷயங்களையும் மிகை படுத்தாமல் யோசிப்பதே அவரது ஸ்டைலாக இருக்கிறது.
ஒரு கேள்வியும் அதற்கான பதிலுமே இதற்கு சரியான உதாரணம். அண்மையில் சென்னைக்கு வந்திருந்த லட்சுமிமேனனிடம், நீங்க ஏங்க பெரிய பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்க மாட்டேங்கிறீங்க? அவங்க கூப்பிடலையா, அல்லது நீங்கதான் நடிக்கலையா? அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷெல்லாம் உங்க கண்ணுக்கு ஹீரோக்களா தெரியலையா என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டால் துடுக்காக ஒரு சிரிப்பு சிரிக்கிறார் லட்சுமி.
இப்படி மொத்தமாக கேட்டா எந்த கேள்விக்கு முதல்ல பதில் சொல்றது? இருந்தாலும் அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் சொன்னா போதும்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன ஹீரோக்களுடன் நடிக்கணும்னு எனக்கும் ஆசைதான். பட் அவங்க படங்களில் நடிக்கணும்னா நான் கவர்ச்சி காட்ட தயாராக இ-ருக்கணும். எனக்கு எப்போதும் அது சரியா வராது.
என் பாலிஸிக்கு உட்பட்ட ஹீரோக்களோடு ஜோடி சேர்வதில் எனக்கு எவ்வித சிரமும் இருப்பதாக தெரியல. ஸோ… நீங்க சொன்ன நடிகர்களோடு என்னால நடிக்கவும் முடியல என்றார். இத்தனை பல படங்களில் நடிக்க அழைப்பும் வந்ததாம் அவருக்கு.
இதற்கிடையில் வரும் நாட்களில் ப்ளஸ் ஒன் போகவிருக்கும் லட்சுமிமேனனிடம் நிறைய பேர் வந்து இப்படி சொல்கிறார்களாம். அதான் சினிமாவுல பெரிய ஹீரோயினாகிட்டே.
அதற்கப்புறமும் ஸ்கூலுக்கு போகணுமா என்று. சினிமா எப்பவும் நிரந்தரம் இல்லேங்கறது எனக்கு நல்லா தெரியும். கல்வி மட்டும்தான் நிரந்தர வேலை வாய்ப்பை கொடுக்கும். இன்னும் ரெண்டு வருஷத்துல என் மார்க்கெட் சுத்தமா இறங்கிருச்சுன்னா நான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியாது. அப்ப கல்லு£ரிக்கு போகலாம் இல்லையா? என்றார்-.
இந்த எழுபத்தைந்தாண்டு கால தமிழ்சினிமா வரலாற்றில் இப்படியொரு நடிகையையும் இப்படியொரு பதிலையும் எங்காவது கேட்டிருக்கிறீர்களா, பார்த்திருக்கிறீர்களா?
Post a Comment