BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 18 June 2013

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

பி.வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார்.
படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம். இது குறித்து பி. வாசு கூறுகையில்,

கரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார்.

ஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில், ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது.

சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார்.

படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம். படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது.

ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Post a Comment

 
Copyright © 2013 Tamil Space Updates
Designed by Bharath Technologies