தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே இறந்து போனவர் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமணா ஜயர். அவரது மகன் ரவி சாஸ்திரி(45). அவர் தேவிப்பட்டினத்தில் உள்ள திலகேஸ்வர சுவாமி கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.
இதய கோளாறு காரணமாக கடந்த 13ம் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 16ம் திகதி அதாவது நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்தநிலையில் நேற்று இரவு ரவியின் கால் விரல் அசைந்தது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் உயிருடன் இருப்பதும், இதயம் பலவீனமாக உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் இயத நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இன்று காலை எழுந்து உட்கார்ந்து உறவினர்களுடன் பேசியுள்ளார். இறந்தவர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிருடன் வந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து அவரது மனைவி புவனா கூறுகையில், சிவ பெருமானை தொடர்ந்து பூஜித்து வந்தோம். அவர் அருளால் தான் என் கணவர் உயிருடன் மீண்டு வந்துள்ளார் என்றார்.
Post a Comment