சமீபத்தில் குஷ்பு நடிகர் விஜய்யை சந்தித்தார். சின்னச் சின்ன படங்களை தயாரித்து வரும் குஷ்பு விஜய்யை வைத்து பிரமாண்டமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறார்.
அதற்கான சந்திப்புதான் இது என சிலர் எழுதினர். சுந்தர் சி. விஜய்யை இயக்குவார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தீயா வேலை செய்யணும் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் சி. யிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அஜீத்திடம் கதை சொல்லியிருப்பதாகவும், ஆனால் அஜீத்தை நான் இயக்குகிறேனா இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும், ஆனால் சீக்கிரமே அவரை இயக்குவேன் என சுந்தர் சி. தெரிவித்தார்.
Post a Comment